கிராதுருகோட்டே பகுதியில் புதையல் பெற்றுக்கொள்வதற்காக அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தெமடன்அல்ல, கல்பொருயாய, பகுதியில் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பூஜை பொருட்கள், அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் கடுவலை, தெல்தெனிய, மொனராகலை, லுனுகல, செவனகல, மற்றும் கிராதுருகோட்டே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

