நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு பிணை மறுப்பு

Posted by - November 28, 2017

யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் மூவரும் கையளித்த பிணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது மேற்படி மனுவை நிராகரித்த யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்ரி சைலவன், சந்தேக நபர்கள் மூவரின் விளக்கமறியலை எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதிவரை நீட்டித்து உத்தரவிட்டார். நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கடந்த ஜூலை 22ஆம் திகதி காலை வேளையில் இடம்பெற்றது. இதில், நீதிபதியின்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 78 வயது முதியவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

Posted by - November 28, 2017

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முல்லைத்தீவைச் சேர்ந்த 78 வயது முதியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கு விசாரணை முடிவடைந்து இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த வயது முதிந்த நபர் ஒருவர் தனது பக்கத்து வீட்டு ஆறு வயது சிறுமிக்கு பாலியல்

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது

Posted by - November 28, 2017

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாண நகரின் பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வைத்து இன்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் இருவரிடமும் இருந்து 2 கிராம் எடையுடைய 60 ஹெரோயின் பக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கந்தளாய் மற்றும் மாத்தளையைச் சேர்ந்த 37, 28 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் – பிரித்தானிய பிரதி உயிரிஸ்தானிகர் சந்திப்பு

Posted by - November 28, 2017

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் டொம் பேன் (TOM BURN) இடையிலான சந்திப்பொன்று நேற்று (27) பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களும் இன நல்லிணக்கம், அபிவிருத்தி, அரசியல் பற்றி ஆளுநரிடம் வினவியதுடன் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகளவில் வாக்குகள் கிடைக்கப்பெற்றது. அந்த வாக்குகள் தொடர்ந்தும் இருக்கின்றதா? எனவும் பிரித்தானிய பிரதி உயரிஸ்தானிகர் கேள்வி எழுப்பினார். இதேவேளை,

காணாமல் போன அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்பு

Posted by - November 28, 2017

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் கடற்படையினரின் உதவியுடன் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரண்டு தந்தையர்களின் பிள்ளைகளான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு கணேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி அண்ணன்,

மாணவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு Unique Student Code, Finger Print முறை

Posted by - November 28, 2017

அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கைகளின் போது மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்குமான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்காகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மூலம் நியமிக்கப்பட்டிருந்த குழுவினால் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் இலக்கமொன்றை (Unique Student Code) அறிமுகம் படுத்தவும் அதனுடன் கைவிரல்

அழுத்கமையில் துப்பாக்கி சூடு

Posted by - November 28, 2017

அழுத்கம பகுதியில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றை கொள்ளையிடவந்த சந்தேகநபர்கள் இருவர் குறித்த முயற்சி வெற்றியளிக்காத பட்சத்தில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். எனினும், துப்பாக்கி சூட்டு சம்பவத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொள்ளையர்கள் முகம் மறையக்கூடிய விதத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணிந்து வந்துள்ளதாக அழுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை – தென்கொரிய ஜனாதிபதிகளின் எதிர்பாராத சந்திப்பு

Posted by - November 28, 2017

தென்கொரியாவிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இலங்கை ஜனாதிபதி மீது தான் கொண்டுள்ள நன்மதிப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியை இன்றே வரவேற்பதற்கான ஏற்பாடுகளை தென்கொரிய ஜனாதிபதி மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மூன்று நாள் அரசமுறை விஜயத்தின் முதற்கட்டமாக சியோல் நகரில் அமைந்துள்ள ஜொக்யேசா புராதன பௌத்த விகாரையில் வழிபாடு செய்வதற்காக இன்று (28) பிற்பகல் அங்கு விஜயம் செய்தபோது,

ஒப்பந்தத்தை மறுத்தமையே இந்தியாவுடனான போருக்கு காரணம்!- த ஹிந்து

Posted by - November 28, 2017

1987 ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்தமை இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையிலான ஒரு போருக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிரபாகரனுக்கு உறுதியான ஆதரவு வழங்கியதாக ஆயுதக் குழு கூறியிருந்தது. ​சென்னை வி.ஓ.சி. நூலகத்தினால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பல ஆவணங்கள் மற்றும் பிரகாகரனின் வரலாறு அடங்கிய புத்தகம் ஒன்று விரைவில் வௌியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திரட்டப்பட்ட ஆவணங்களில் உள்ள பல தகவல்கள் தொடர்பில் தஹிந்து

தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிட்டால் நாடு பூராகவும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைப்போம்!

Posted by - November 28, 2017

மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒட்டிக்கொண்டு தமது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்றார். தேர்தலை