தடையுத்தரவு நீக்கம் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்

Posted by - November 30, 2017

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை அடுத்து, எல்லை நிர்ணய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்து வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரமபத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - November 30, 2017

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தென்கொரியாவுக்கு அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கிருந்து இன்று (30) காலை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதியின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தப் பணிப்புரையை வழங்கியுதுடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அம்மக்களை இடர்நிலைமைகளில் இருந்து மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முப்படையினரை ஈடுபடுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.

சீரற்ற காலநிலை – தகவல்களை 1902 எனும் இலக்கத்திற்கு அறிவியுங்கள்

Posted by - November 30, 2017

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக தகவல் தருமாறு உள்நாட்டலுவல்கல் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதற்கான தொலைபேசி இலக்கம் 1902 ஆகும். . நாடு முழுவதிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களுக்கு துரிதமாக நிவாரண சேவையை வழங்குமாறும் பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்குமாறும் உள்நாட்டலுவல்கல் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

Posted by - November 30, 2017

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் இன்று காலை மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், நீரின் உயர் மட்டம் வெகுவாக கூடுவதனால் மதியம் மேலதிகமாக ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஹபரணையில் கார் – பஸ் மோதி விபத்து : 2 பேர் பலி

Posted by - November 30, 2017

ஹபரணையில் காரொன்றும் பஸ் வண்டியொன்றும் மோதியதில் இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையிலிருந்து தம்புள்ளை சென்ற கார் ஒன்றும் கண்டியிலிருந்து திருகோணமலை சென்ற தனியார் பஸ் வண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காரின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளது! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - November 30, 2017

நல்லிணக்கம் நல்லாட்சி என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பெயரளவில்தான் உள்ளதென்று, உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் நடைபெற்ற நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில் குற்றம் சாட்டியுள்ளார். சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளை அடிப்படை மனித உரிமையாகப் புதிய யாப்பில் உறுதிப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட 21 ஆவது உலக மீனவர் தின நிகழ்வுகள் மன்னார் நகர சபை மண்டபத்தில் கடந்த 28.11.2017 அன்று

மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி 2017

Posted by - November 30, 2017

27.11.2017 மாவீரர்நாளன்று யோர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களை அழைத்து அவர்களுக்கான மதிப்பளிப்பு மிகச்சிறப்பாக மாவீரர்நாள் மண்டபத்தில் நடைபெற்றது. யேர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இவர்களுக்கான மதிப்பளிப்பை மட்டு அம்பாறை அரசியற் துறைப் பொறுப்பாளர் திரு. தயாமோகன் அவர்கள் வழங்கினார். மாவீரர்களாகிய தங்கள் பிள்ளைகளை, சகோதர சகோதரிகளை, குடும்பத் தலைவர்களை, கண்ணீருடன் நினைவுகூர்ந்த அத்தருணம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

போலி கணக்குகளை முடக்க பேஸ்புக் புதிய திட்டம்!

Posted by - November 30, 2017

பேஸ்புக் சேவையை பயன்படுத்துவோரின் கணக்குளை சரிபார்க்க பேஸ்புக் புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடையா?: டேரன் லீமான்

Posted by - November 30, 2017

ஒழுங்கீன சர்ச்சையை தவிர்க்க இரவில் வெளியில் செல்ல ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு டேரன் லீமான் பதிலளித்துள்ளார்.