ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - December 28, 2017

ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரத்னாயக்கவை பதவியிலிருந்து விலக்குமாறு கூறி அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையில் ஊவா மாகாண சபையின் 12 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். 2018ம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் சபையில் சமர்பிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்து சபையிலிருந்து வெளியேறியமை, வரவு செலவுத் திட்டத்தை புறக்கணித்தமை காரணமாகவே எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

ரஷியா: செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு – 10 பேர் படுகாயம்

Posted by - December 28, 2017

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடித்ததில் அங்கிருந்த 10 கடைக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: ஒருவர் பலி

Posted by - December 28, 2017

ஈரான் நாட்டு தலைநகர் டெஹ்ரானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் பலியானார். மேலு 50-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஜெருசலேம் நகரில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம்

Posted by - December 28, 2017

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப்புக்கு நன்றி கடனாக, அந்நகரில் அமைய உள்ள சுரங்க ரெயில் நிலையத்திற்கு அவருடைய பெயரை வைக்க இஸ்ரேல் மந்திரி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய உணவுகளை ஓரம் தள்ளி முதல் பரிசு பெற்ற இந்திய சமோசா

Posted by - December 28, 2017

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சமையல் போட்டியில் இந்தியாவின் பிரபல திண்பண்டமான சமோசா மற்றும் காஷ்மீரி சில்லி சிக்கன் ரெசிபி முதல் பரிசு பெற்றுள்ளது.

ஆப்கன்: காபுல் நகரின் இருவேறு இடங்களில் குண்டு வெடிப்பு – 45 பேர் பலி

Posted by - December 28, 2017

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 45-க்கும் மேற்பட்டோர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கட்சியில் இல்லாத அழகிரி மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதா?: ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன் கண்டனம்

Posted by - December 28, 2017

மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தொடரும் வரை எந்த தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறாது என்று மு.க.அழகிரி கூறியதற்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஜெ.அன்பழகன் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். நடவடிக்கை

Posted by - December 28, 2017

அ.தி.மு.க.வில் இருந்து டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 46 பேரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர்.

சம்மனின் ஒரிஜினல் கிடைத்தால் சசிகலா விளக்கமளிப்பார் என சிறை அதிகாரிகள் கடிதம்

Posted by - December 28, 2017

ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்தின் சம்மன் ஒரிஜினல் கிடைத்த பின்னர் விளக்கமளிக்கிறேன் என சிறை அதிகாரிகளிடம் சசிகலா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்: சகோதரருக்கு அரசு வேலை – முதலமைச்சர்

Posted by - December 28, 2017

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் அவரது சகோதரருக்கு அரசு பணி நியமன ஆணையினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.