கொழும்பில் மனோ கணேசன் தனித்து போட்டியிடுவது சரியானதே – விக்கினேஸ்வரன்
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே என்று வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் அரசாங்கத்தினுள் தன்னை பலப்படுத்திக் கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்களிடம் இந்த

