சீரற்ற காலநிலையினால் சாதாரண தர பரீட்சைக்கு எதுவித தடையுமில்லை

Posted by - December 4, 2017

க.பொ.த சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பரீட்சைக்கு எந்தவித தடைகளும் ஏற்படாது என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் சேதமடைந்திருந்தால் புதிய அனுமதி அட்டைகள் வழங்கப்படும் எனவும் நாளை (5) நள்ளிரவு முதல் மீட்டல் வகுப்புக்கள் அனைத்தும் தடை செய்யப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Posted by - December 4, 2017

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணைகள் அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணங்களை தயாரித்தார் என தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்குடன் தொடர்புடைய முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்கள் நீதிமன்றிற்கு சமூகமளிக்காமையினால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக

தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கை

Posted by - December 4, 2017

தெற்காசியாவின் பிரபலமான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு. அதற்கான அடிப்படை தேவைகள் தற்போது பூரணப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் பியருக்கான வரி குறைப்பு சுற்றுலா பயணிகளுக்கு பாரிய லாபமாகும். யார் என்ன சொன்னாலும் பியருக்கான வரி குறைப்பை வரவேற்கின்றேன் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் அடுத்தவருட வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில்

தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – மத்தியகுழுவைக் கூட்டுகிறது ரெலோ

Posted by - December 4, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஆசனப்பகிர்வினையடுத்து டெலோ இயக்கமும் மனக்கசப்படைந்துள்ளதாக

13ஆவது மாடியிலிருந்து விழுந்த நபர் பலி

Posted by - December 4, 2017

பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டிடத்தின் 13ஆம் மாடியிலிருந்து நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் 21 வயதான மஹபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் செயற்பாட்டால் தடுக்கப்பட்ட பெரும் விபத்து

Posted by - December 4, 2017

வவுனியா குளம் உடைப்பெடுக்க இருந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்களத்தின் துரித செயற்பாட்டால் விபத்தொன்று தவிர்க்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வவுனியா குளத்தில் துருசு அமைந்திருந்த பகுதியை சூழ மண் அரிப்பு ஏற்பட்டு குளத்தின் உட்புறமாக பாரிய துவாரம் ஏற்பட்ட நிலையில், குளக்கட்டு உடையும் நிலை ஏற்பட்டிருந்தது. இன்று காலை குளத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் குளக்கட்டில் நீரின் போக்கு வழமைக்கு மாறாக காணப்பட்டதையடுத்து நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து கமக்காரர் அமைப்பு மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினர் விரைந்து செயற்பட்டு

60 : 20 : 20 என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொகுதி உடன்பாடு!

Posted by - December 4, 2017

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் தவி­சா­ளர் பதவி பெறும் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சிக்கு அந்­தச் சபை­யில் 60 வீத­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது என்­றும் ஏனைய இரு கட்­சி­க­ளும் எஞ்­சிய 40 வீதத்­தை 20 : 20 எனப் பங்­கி­டு­வ­தும் என்­றும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புறக்கோட்டை கடை ஒன்றில் தீ

Posted by - December 4, 2017

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட குறித்த தீ விபத்தினை தீயணைப்பு படை அதிகாரிகளுடன் சேர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுக்கு காரணமாகவே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன்னர் தேர்தல்

Posted by - December 4, 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி  மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்க்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தலதா மாளிகைக்கு சொந்தமான காணியில் புதையல் அகழ்வு

Posted by - December 4, 2017

தலதா மாளிகைக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலதா மாளிகைக்கு சொந்தமான கலேவெல வஹகோட்டே பகுதியில் உள்ள காணியொன்றிலேயே பல மாதங்களாக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. தம்புள்ளை, பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவொன்றினாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெக்கோ இயந்திரம், மோட்டார் சைக்கிள், கல்லை துளையிடும் கருவி மற்றும் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.