திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

332 0

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணைகள் அடுத்த வருடம் பெப்பிரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது போலி ஆவணங்களை தயாரித்தார் என தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்குடன் தொடர்புடைய முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்கள் நீதிமன்றிற்கு சமூகமளிக்காமையினால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதீடு தொடர்பான விவாதங்களில் பங்கேற்கவுள்ளமையினால் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நீதிமன்றிற்கு பிரசன்னமாகமுடியவில்லை என நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment