Breaking News
Home / தமிழீழம் (page 5)

தமிழீழம்

யாழ்.குடாநாடு நீரில் மூழ்கும் அபாயம்

வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற நேரிடுமென நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க …

Read More »

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை பருத்தித்துறை வல்வெட்டித்துறை சாவகச்சேரி என மூன்று நகர சபைகள் மற்றும்இ 13 பிரதேச சபைகளுக்கும் மொத்தம் 402 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 243 உறுப்பினர்கள் வட்டார முறையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஏனையஇ 159 உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த …

Read More »

திடீரென வற்றிப் போன கிணறுகள்!! சுனாமி பீதியால் பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!! கிழக்கில் பதற்றம்!!

கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும், பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை, …

Read More »

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானப் பணி ஆரம்பம்!

வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதான மூலம் துப்பரவுப் பணி நடை பெற்று வருகிறது. இன்று (புதன்கிழமை) காலை 09.00 மணிமுதல் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தேர்தலுக்கு முன் வேலை வேண்டும்!

தேர்தலுக்கு முன்னராக வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனக் கோரி பட்டதாரிகள் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை போராட்டத்தை மேற்கொண்டனர். வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது. தற்போது தேர்தல் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேர்தலிற்கு முன் அரச நியமனங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் இல்லையேல் நடைபெறவுள்ள தேர்தல்களை பட்டதாரிகள் புறக்கணிக்கப் போவதாகவும் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது.

Read More »

காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது

காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் வழக்காளிக்கு வழங்கவேண்டிய 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தும்படி நீதிவான் கட்டளை வழங்கியுள்ளார். அந்தக் கட்டளையானது சட்டரீதியான கட்டளை இல்லை. அந்தக் கட்டளையை இந்த மன்று தள்ளுபடி செய்கிறது.  மாறாக எதிரிக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் …

Read More »

வடக்கு தபால் ஊழியர்களுக்கு 583 புதிய சைக்கிள்கள்

வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக ஊழியர்களுக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வடக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்களை தனித்தனியே அனுப்பி வைக்கவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு 269, கிளிநொச்சி 94, வவுனியா 83, மன்னார் 80, முல்லைத்தீவு 57, என ஒதுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 269 சைக்கிள்களும் நேற்று அதிகாலை கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த …

Read More »

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால்  புதைத்துவைக்கப்பட்ட ஜெனி மிதிவெடிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மிதிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதிக்கு 14.11.2017 இன்று மாலை 5.00 மணியளவில் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதியினை தோண்டியுள்ளார்கள் இதன்போது 41 ஜெனீ மதி …

Read More »

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது. மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com