யாழில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணம் மாயம்: சிக்கிய சித்தப்பா

26 0

யாழில் சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றையதினம் குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.