நிலையவள்

ஜேர்மன் நத்தார் மார்க்கெட்டில் லாரி ஏற்றி 9 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

Posted by - December 19, 2016
ஜேர்மனியில் சற்று முன்னர் இடம்பெற்ற பாரிய விபத்து ஒன்றில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைநகர் பெர்லினில் பொது மக்கள் கிறிஸ்துமஸ் மார்கெட் ஒன்றில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று…
மேலும்

தமிழ் போன்று பழமையான கலாச்சாரம் உலகில் எதுவும் இல்லை -பிரதமர்

Posted by - December 19, 2016
தமிழ் மற்றும் சிங்களம் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு…
மேலும்

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கடந்த 12ஆம் திகதி வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம்…
மேலும்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை – விக்னேஸ்வரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.…
மேலும்

சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், ஆண்டிஐயா புவனேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் (காணொளி)

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டிஐயா புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்டுள்ள ஆண்டிஐயா புவனேஸ்வரன் இன்று பிற்பகல் 03 மணிக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், வடக்கு…
மேலும்

அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

Posted by - December 19, 2016
அனைத்து தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் பி.எல். அபயரத்ன தெரிவித்துள்ளார். 21 ஆம் திகதி நள்ளிரவு…
மேலும்

பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை

Posted by - December 19, 2016
பெரும்போகத்தில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமானதை அடுத்து யாழ்ப்பாணம், கம்பஹா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை வைப்புச் செய்யும் பணிகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளரும் உரச்…
மேலும்

மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள்(படங்கள் )

Posted by - December 19, 2016
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு பங்குதந்தை சி.வி.அன்னதாஸ் தலைமையில் ஆலய அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. நடைபெற்ற வருடாந்த ஒளிவிழா நிகழ்வில் மறைக்கல்வி ஆசிரியர்கள்…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் (காணொளி)

Posted by - December 19, 2016
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று மாவட்ட செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட் பதியுதின் பாராளுமன்ற உறுபபினர் சிவமோகன் ஆகியோர் தலைமையில்…
மேலும்

65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் (காணொளி)

Posted by - December 19, 2016
மீள்குடியேற்ற அமைச்சால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடு எங்களுக்கு பொருந்தாத வீடு என்ற தொனிப்பொருளில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம், நடைபெற்றது.…
மேலும்