நிலையவள்

முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Posted by - January 25, 2017
  முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, இன்று காவை 9 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில்…
மேலும்

வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்கள்  கைது(படங்கள்)

Posted by - January 25, 2017
பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வுபிரிவினர் நேற்று கைது செய்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே சந்தேக நபர்கள் கது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, பியர்போத்தல்கள் அடங்கிய 21…
மேலும்

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வாவியில், மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மீனவர்களால் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது. மஞ்சந்தொடுவாய் வாவிக்கரையில் நடமாடிய 10 அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்களால் பிடிக்கப்பட்ட முதலையை, அப்பிரசேத்திலுள்ள…
மேலும்

மட்டக்களப்பில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம்(காணொளி)

Posted by - January 25, 2017
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நாட்டில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில், பெண்களின் அங்கத்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில்,…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட 10 மாணவர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸாரினால் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின்போது, குறித்த 10 மாணவர்களையும் தலா ஒருவர் ஒரு இலட்சம்…
மேலும்

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் புகையிரதம் மோதி ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 25, 2017
இன்று பிற்பகல் 03.30 மணியளவில் கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதிப்புகையிரதமும், புகையிரதக் கடவையை கடக்க முற்;பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. இவ்விபத்தில் மோட்டார்…
மேலும்

மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில், மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு மட்டிக்கழி பகுதியில் இருந்து நாவலடி புதுமுகத்துவாரம் கடற்பரப்பில் படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது வீசிய கடும்…
மேலும்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(காணொளி)

Posted by - January 25, 2017
காணாமற்போனோரின் உறவினர்களால், வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. காணாமற்போன தங்களின் உறவினர்கள் தொடர்பில் இறுதியான முடிவை அறிவிக்குமாறும், அரசியல் கைதிகளாக நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…
மேலும்

மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும்- நடராஜன் (காணொளி)

Posted by - January 25, 2017
மாணவர்கள் தமது இலக்குகளை அடைவதற்கு முதலில் கனவுகாண வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் இன்று நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது பாராளுமன்ற…
மேலும்

முல்லைத்தீவில் 243 ஏக்கர் காணி இரானுவத்தளபதியால் இன்று கையளிப்பு(காணொளி)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் அமைக்கப்பட்ட மஹிந்தோதயா ஆய்வு கூட கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி, முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான பத்திரங்களை கையளித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 1350 பேருக்கான காணியனுமதிப்பத்திரங்கள்…
மேலும்