நிலையவள்

வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் (காணொளி)

Posted by - January 27, 2017
வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து, மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேப்பங்குளம் 6ஆம் வீதியில் உள்ள 10…
மேலும்

ஹட்டன் இந்துமா சபை வீதியில் விபத்து(காணொளி)

Posted by - January 27, 2017
நுவரெலியா ஹட்டன் இந்துமா சபை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி ஹட்டன் இந்துமா சபை வீதியைக் கடக்க…
மேலும்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி(காணொளி)

Posted by - January 27, 2017
சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது. நாளையும், நாளை மறுதினமும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நாடா வெட்டித்திறந்து வைத்தார்.…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரிடம் கையளித்தனர்(காணொளி)

Posted by - January 27, 2017
மாலபே தனியார் மருத்து கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை மாணவர்கள், இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் நடைபயணத்தை இன்று மேற்கொண்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இருந்து, மருத்துவபீட…
மேலும்

மட்டக்களப்பில்  முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா, இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் வெஸ்லியோ வாஸ்  தலைமையில் நடைபெற்ற கால்கோள் விழா நிகழ்வில், பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு…
மேலும்

மட்டக்களப்பு ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு, மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தினால் இன்று தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிலவுகின்ற தளபாடங்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில், வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, குறித்த பாடசாலைக்குத் தளபாடங்கள் வழங்கி…
மேலும்

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது(காணொளி)

Posted by - January 27, 2017
நுவரெலியாவில், ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் வானொன்று குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது. நுவரெலியா வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை-குயில்வத்தை பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று மதியம் இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில், நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு…
மேலும்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று லயன்ஸ் கழகத்தின் உதவியுடன், மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் தரமுயர்த்தப்பட்ட நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.சண்டேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர்…
மேலும்

மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 27, 2017
மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை காரணமாக படுவான்கரையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையில் பிரதான போக்குவரத்து பாதைகளாகவுள்ள மண்டூர்-வெல்லாவெளி பிரதான வீதி, ஆயித்தியமலை-கரடியனாறு பிரதான வீதி, கிரான்-புலிபாய்ந்தகல் பிரதான வீதி ஆகியவற்றினால் வெள்ள நீர் பாய்ந்துசெல்வதனால் எழுவான்…
மேலும்

ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி(காணொளி)

Posted by - January 27, 2017
  நுவரெலியாவில், ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன்-குடாஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
மேலும்