ஹட்டன் இந்துமா சபை வீதியில் விபத்து(காணொளி)

338 0

நுவரெலியா ஹட்டன் இந்துமா சபை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த மாணவி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி ஹட்டன் இந்துமா சபை வீதியைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ ஒன்றுடன் மோதியுள்ளார்.

சம்பவத்தையடுத்து, ஆட்டோவின் சாரதியைக் கைது செய்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேரடியாக இடம்பெறும் சம்பவம், அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த மாணவி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தரம் 4இல் கல்வி பயிலும் மாணவி எனவும், சாரதியை பொலிஸ் பிணையில் விடுதலை செய்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.