நிலையவள்

அக்கரபத்தனை தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது(காணொளி)

Posted by - February 2, 2017
நுவரெலியா, அக்கரபத்தனை கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று கீழிறந்கியுள்ளது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்திற்கு சொந்தமான கல்மதுரை பிரிவில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று அண்மையில் ஏற்பட்ட மழையால் கீழிறந்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் 22 குடும்பங்களைச் சேர்ந்த சுமார்…
மேலும்

சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 2, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவின் விளக்கமறியல்மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. வெல்கமவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே,வெல்கமவை அடுத்த மாதம் 06ம் திகதி வரையில் விளக்கமறியலில்…
மேலும்

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 2, 2017
2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை செய்யப்பட விவகாரம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கம்பஹா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் திகதி வெலிவேரிய…
மேலும்

அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், இன்னுமொரு ஈழயுத்தம் வெடிக்கும்-கே.சிவாஜிலிங்கம்

Posted by - February 2, 2017
அரசாங்கம் முன்னாள் போராளிகளை கைதுசெய்வதால், பாலஸ்தீனத்தில் மக்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதை போன்று எமது மக்களும் சீற்றம் கொள்வார்கள் என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை…
மேலும்

மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் -பொன்சேகா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறந்தவர் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,…
மேலும்

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார்கள் தலைமை தாங்க வேண்டியது அவசியம்-மைத்திரிபால சிறிசேன

Posted by - February 2, 2017
போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார் தலைமை தாங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி லபதூவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து குடும்பங்களையும் போதையற்ற குடும்பங்களாக மாற்றும் முயற்சியின்…
மேலும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை -சமீர பெரேரா

Posted by - February 2, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்னும் நாகரீகமயப்படவில்லை என இடதுசாரி கேந்திர நிலையத்தின் இணை அழைப்பாளர் சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர், கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்-தயாசிறி ஜயசேகர

Posted by - February 2, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் கணக்காய்வாளர் நாயகத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து…
மேலும்

யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும்- மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க (காணொளி)

Posted by - February 2, 2017
யாழ்ப்பாணத்தில் கல்விப் பாரம்பரியம் மீண்டும் ஏற்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாக்க கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொறியியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம் மற்றும், கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில்…
மேலும்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பு(காணொளி)

Posted by - February 2, 2017
வவுனியாவில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் சேவையாற்றுவதில் தனியார் பேருந்து ஊழியர்கள் இடையூறு ஏற்படுத்துவதுடன் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, வவுனியா இலங்கை போக்குவரத்துச்…
மேலும்