போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார்கள் தலைமை தாங்க வேண்டியது அவசியம்-மைத்திரிபால சிறிசேன

293 0

போதைப் பொருளற்ற குடும்பங்களை கட்டியெழுப்ப தாய்மார் தலைமை தாங்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலி லபதூவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடும்பங்களையும் போதையற்ற குடும்பங்களாக மாற்றும் முயற்சியின் தலைமைத்துவத்தை தாய்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப அலகினை அபிவிருத்தி அடையச் செய்வதற்கும் சுபீட்சமாக்குவதற்குமான பிரதான தடையாக போதைப் பொருள் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குடும்பத்தையும் சமூகத்தையும் மீட்டெடுத்து நோயற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கான பொறுப்பினை தாய்மார்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

போதைப் பொருள் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகள் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.