நிலையவள்

திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - February 8, 2017
  திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார் நாட்டு மீனவர்களின் பாய்மரத்தோனி காற்றினால் இழத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு…
மேலும்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி(காணொளி)

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில், கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராஜா கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்…
மேலும்

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 8, 2017
  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டது. குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ்ப்பாணம் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன்போது…
மேலும்

யாழ் நல்லிணக்கபுர  வீட்டுதிட்டத்தில் நாங்களாக விரும்பி குடியேறவில்லை மக்கள் தெரிவிப்பு

Posted by - February 8, 2017
கீரிமலையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் அமைத்து கொடுக்கப்பட்ட வீட்டு திட்டத்தில் நாங்கள் விரும்பி நல்லிணக்கபுரத்தில் குடியேறவில்லை வெளிநாடுகளுக்கு இங்கு முகாம்கள் எதுவும் இல்லை என்பதை வெளிக் காட்டுவதற்கே அரசு அவசரமாக மீள் குடியேற்றியது என நல்லிணக்கபுர கிராம மக்கள்…
மேலும்

மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்

Posted by - February 8, 2017
மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ரஞ்சன் ராமநாயக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளார். சட்டவிரோத மண் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்விரோத மண் அகழ்விற்கு…
மேலும்

ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது

Posted by - February 8, 2017
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடர் எதிர்வரும், பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம்…
மேலும்

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

Posted by - February 8, 2017
சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். 2014ஆம், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு பெரும்போகங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள…
மேலும்

சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - February 8, 2017
சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்காக அண்மையில் நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் கிடைத்துள்ளதாகவும், நேர்முகப்பரீட்சை நடத்தப்பட்டே உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர்…
மேலும்

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

Posted by - February 8, 2017
மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம், மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது…
மேலும்

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி,…
மேலும்