திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

382 0

 

திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார் நாட்டு மீனவர்களின் பாய்மரத்தோனி காற்றினால் இழத்து வரப்பட்ட நிலையில் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மியன்மார் நாட்டு மீனவர்களில் ஒருவரை திருகோணமலை கொட்பே துறைமுகத்திற்கு அழைத்து வந்து திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மற்றைய மீனவரை அழைத்துவரும் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர் தமது பெயர் மாஒசேன் என்றும் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.