நிலையவள்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்

Posted by - February 9, 2017
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய நான்கு நபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த…
மேலும்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் பலி

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மற்றும் ஒரு இராணுவ வீரர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  …
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் போனோரது பட்டியலை வெளியிடுமாறும், காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய…
மேலும்

வவுனியாவில் வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 9, 2017
வடக்கு மாகாண வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பீட மாணவர்களால் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது வடக்கு மாகாண வைத்தியர்கள், மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றினைந்து  நேற்று  பிற்பகல் வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிலிருந்து, பேரணியாக இலுப்பையடி, பசார் வீதி,…
மேலும்

கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பு(காணொளி)

Posted by - February 9, 2017
படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 9 தினங்களாக முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடாத்திவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பாக இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பொன்று நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
மேலும்

அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)

Posted by - February 9, 2017
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக வீதியில் இந்தியாவின் ஒடிசா பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட…
மேலும்

மட்டக்களப்பில் பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயம்(காணொளி)

Posted by - February 9, 2017
மட்டக்களப்பில் நேற்று  பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை…
மேலும்

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற் திறன் அபிவிருத்தி…
மேலும்

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

Posted by - February 9, 2017
கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள்…
மேலும்

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - February 9, 2017
  எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் எழுக…
மேலும்