காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல்

298 0

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இன்று அலரிமாளிகையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

காணாமல்போனோரின் உறவினர்கள், கடந்த மாதம் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போனோரது பட்டியலை வெளியிடுமாறும், காணாமல் போனோரின் உறவினர்கள், தங்களது பிள்ளைகளின் நிலையை அறிய வேண்டும் எனவும் வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, வவுனியாவுக்குச் சென்ற பாதுகாப்பு இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, இன்று பிரதமருடனான சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்துதருவதாக உண்ணாவிரதம் மேற்கொண்ட மக்களிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஒன்று இடம்பெறவுள்ளது.