நிலையவள்

சந்திரிக்கா, மஹிந்த, ரணில் சந்திக்க ஏற்பாடு

Posted by - December 16, 2016
அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் இந்தியாவின் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்
மேலும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்கா விட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது ஐ.தே.க உறுப்பினர்களுக்கு பைசர் முஸ்தபா எச்சரிக்கை

Posted by - December 16, 2016
  ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான பைசர் முஸ்தபா எச்சரிக்கை விடுத்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகியிருக்கா விட்டால் இந்த அரசாங்கத்தை அமைத்திருக்க முடியாது என்பதனை ஐக்கிய சேதியக்…
மேலும்

அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

Posted by - December 16, 2016
அண்மைய காலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் தொகைகளை பகிரங்கமாக அழிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.கொக்கைன் தொகைகளை காலிமுகத்திடலில் வைத்து…
மேலும்

இலங்கையிலுள்ள 5000 ரூபா தொடர்பில் வெளியான தகவல் உண்மையல்ல- ரவி கருணாநாயக்க

Posted by - December 16, 2016
இலங்கையிலுள்ள5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்துரைத்தார்.நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் காணப்பட்ட எதிர்க்…
மேலும்

யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட துறைமுகத்தின் ஊழியர்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 16, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஊழியர்கள் கடந்த 9 தினங்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை நிறுத்தி  யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கடமைக்குத் திரும்பியமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக  துறைமுக கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இக்காலகட்டத்தில் துறைமுக நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டவர்கள்…
மேலும்

குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைப்பு

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதன்படி, குறித்த மனு எதிர்வரும் மார்ச் மாதம்…
மேலும்

கடந்த நவம்பர் மாதத்தில் பாரிய குற்றச் செயல்கள் குறைவு- பொலிஸ் தலைமையகம்

Posted by - December 15, 2016
பாரிய குற்றச் செயல்கள் சம்பங்களில் கடந்த நவம்பர் மாதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த நவம்பர் மாதம் வரையான காலப் பகுதியில் மாத்திரம் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் 7592 பாரிய குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி (காணொளி)

Posted by - December 15, 2016
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டமாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டிய விழிப்புணர்வு நடை பவனியும் மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. சர்வதேச…
மேலும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பு (காணொளி)

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்னவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களினால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது அண்மையில் கடற்படை…
மேலும்

காங்கேசன்துறை தாவடி வீதியில் வாகன விபத்து (காணொளி)

Posted by - December 15, 2016
 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தாவடி வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.யாழ்பாணத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்த விற்பனை வாகனமொன்றும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பயணிகளை ஏற்றிக்கொண்டு…
மேலும்