ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும் ………………

277 0
இன்று மழையின்  மத்தியிலும் 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்கள் ஜனாதிபதியே தீர்வு வழங்கவேண்டும்  ஏனைய  தலைமைகளால்  எங்களுக்கு உரிய தீர்வை வழங்கமுடியாது என தெரிவித்துள்ளனர்
 
இராணுவத்திடமிருந்து விரைவில் எமது காணிகளை விடுவிக்க அரசுக்கு அழுத்தம்  ஒன்றினை வழங்கும் பொருட்டும் எமது போராட்ட வடிவத்தை தீவிரப்படுத்தி எமது காணிவிடுவிப்பை துரிதப்படுத்தும் வகையில் பாரிய போராட்ட்ங்களை முன்னெடுக்க  எமக்கு ஆதரவினை வழங்கும்  அனைத்து  சிவில் சமூக அமைப்புகளும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.   எமக்கு இதுவரையில் பல்வேறு தரப்பினரால் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு  இன்னும் பல சிவில்  அமைப்புகளால்  எமக்காக நேரில் வந்தும் ஆதரவு  வழங்கப்பட்டு வருகின்றது,ஆனாலும் எமக்கான காணி விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை எமது பிரச்னையை அரசு பாராமுகமாகவே பார்த்துவருகின்றது.
இந்த நிலையில் எமது போராட்டத்தை பல்வகைப்படுத்தி தீவிரப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளது.இதன்மூலம்தான் அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் எமது பிரச்சனை தொடர்பில் பாரிய அழுத்தம் ஒன்றினை வழங்க முடியும் எனவே எமக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து  எமக்காக பாரிய போராட்ட்ங்களை முன்னெடுக்க அனைவரும் முன்வரவேண்டுமென கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள  விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக  கொட்டும் பனியிரவையும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது சிறுவர்கள்,குழந்தைகள் ,முதியவர்கள் ,பெண்கள்,என  அனைவரும்  கடந்த 31.01.2017 தொடக்கம்  தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துவருகின்றனர்.
 அத்தோடு இன்றையதினம்  முல்லை வலய கல்வி பணிப்பாளர் திருமதி உ.புவனராஜா அவர்கள் போராட்டக்களத்துக்கு வருகைதந்து பாடசாலை செல்லும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு மாணவர்கள்  பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோரை ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருந்தார்.
அத்தோடு மன்னார்  மாவடடத்தை சேர்ந்த பங்குத்தந்தைமார்  மற்றும் அருட் கோதரிகள்  மக்கள் ஆகியோரும் வருகைதந்து மக்களுக்கான ஆதரவினை தெரிவித்தனர்.
அத்தோடு இன்றையதினம்  முல்லைமாவடட சடடத்தரணிகள்  வருகைதந்து மக்களுக்கான தமது ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு சடட உதவிகள்   தேவைப்பட்டால் தாம் இலவசமாக உதவ தயாராக இருப்பதாகவும் மக்களிடம் தெரிவித்தனர்.
அத்தோடு  சமூக வலைத்தளமூடாக ஒன்றிணைந்த இளைஞர் குழுவினரால் போராடடா களத்திலுள்ள  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் பல வழங்கப்படடன.
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு கிராமத்தில் 84குடும்பங்களுக்கு சொந்தமான 50ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை கையகப்படுத்தி விமானப்படைத்தளம் அமைத்துள்ள விமானப்படையினர் அதனை பலப்படுத்தி வேலிகள் அமைத்து மக்கள்  செல்லமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி காணிகள் அளவிடப்படும் எனவும் காணிகளுக்கு சொந்தமான மக்கள் அனைவரையும் அப்பகுதிக்கு வருமாறும் கேப்பாபுலவு கிராமசேவகர் அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அப்பகுதிக்கு வருகைதந்திருந்தமக்கள் நாள்முழுவதும் வீதியில் காத்திருந்த போதும் அதிகாரிகள் எவரும் காணிகள் அளவிட வருகைதந்திருக்கவில்லை நீந்த நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் அன்றைய தினம் முதல் தாம் தமது சொந்த நிலங்களில் காலடி எடுத்து  வைக்கும் வரை போராட்டம்  தொடருமென கூறி தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு இன்றும் பல பிரதேசங்களில் இருந்து மக்களும்,சிவில் அமைப்புகளும் வருகைதந்து மக்களுடன் கலந்துரையாடியதோடு பல உதவிகளையும் வழங்கி சென்றதோடு  மக்களுக்கான ஆதரவும் பல்வேறு வழிகளில் அதிகரிப்பதை அவதானிக்க முடிகின்றது.
 அத்தோடு இந்தப்போராட்டக்   களத்தில் உள்ள மாணவர்கள் வீதி ஓரத்திலேயே தமது பாடசாலையில் வழங்கப்பட்ட  வீட்டு வேலைகளை செய்வதோடு அனைவரும் இணைந்து தமது  கல்விநடவடிக்கைகளை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. மேலும் இன்றும்  (13,02) மாலை உடையார்கட்டு மகாவித்தியாலய  ஆசிரியர்கள் இணைந்து போராட்ட   களத்திலே உள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளையும் உளவள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளையும்   மேற்கொண்டனர் .
 போராடத்தில் ஈடுபடும் மக்களுக்கான உணவு  மற்றும் இதர உதவிகளை அயல் கிராம மக்களும் இளைஞர்களும் சிவில் சமூக அமைப்புகளும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.