நிலையவள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - March 4, 2017
பேராதனை, கங்கொடவத்தை, மெகாடகளுகமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்குள்ளான இளைஞர் படுகாயமடைந்து பிரதேசவாசிகளால் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
மேலும்

ஐனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2017
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமக்கு நீதி வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
மேலும்

தகாத வார்த்தைகளால் திட்டிய பொலீஸ் அதிகாரி

Posted by - March 4, 2017
எருமை மாடு – நாயே -நடு வீதியில் தாண்டவமாடிய பொலிஸ் அதிகாரி – ஜனாதிபதியின் யாழ் விஜயத்தில் அசிங்கம் எருமை மாடு மாதிரிக் கதைக்கிறியே படிச்சிருக்கிறியா மண்டைக்குள் சரக்கு இல்லையா என  யாழ் பொலிஸ் அதிகாரி ஒருவார் காணாமால் போனோர் உறவுகளைப்…
மேலும்

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்க 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - March 4, 2017
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க காவற்துறை விசேட தொலைப்பேசி இலக்கங்கள் இரண்டினை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் , 011 2326229 அல்லது 011 2854880 என்ற இலக்கங்களுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என காவற்துறை குறிப்பிட்டுள்ளது. குறித்த தகவல்களின் முழு…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி

Posted by - March 4, 2017
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இன்று வவுனியாவில் பேரணியொன்றினை…
மேலும்

மஹரகம பிரதேச ஆடையகம் ஒன்றில் பாரிய தீப்பரவல்

Posted by - March 4, 2017
மஹரகம பிரதேச ஆடையகம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனை அணைப்பதற்காக மஹரகம நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் , காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து செயற்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

தலையில்லா சடலத்தின் என சந்தேகிக்கப்படும் தலை மீட்பு

Posted by - March 4, 2017
  புத்தளம் – மதிரிகம பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் உடையது என கருதப்படும் தலையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தலையில்லா உடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் இது தொடர்பில் விசாரணைகளுக்காக காவற்துறை குழுக்கள்…
மேலும்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது!

Posted by - March 4, 2017
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் அம்பலந்தொட பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 12ம் திகதி மீடியாகொடவில் நபரொருவரை சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் இந்த சந்தேகநபர் தொடர்பு பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

8 தமிழக கடற்றொழிலார்கள் கைது!

Posted by - March 4, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன், அவர்கள் பயன்படுத்திய படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த கைதின் போது கடற்றொழிலாளர் ஒருவர் தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நிலையில் , அவர்…
மேலும்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

Posted by - March 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான  19 ஏக்கர் காணியில் 7.5 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் புதுக்குடியிருப்பு…
மேலும்