நிலையவள்

ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 24, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரிப்பதாக ஏற்கனவே வழங்கப்பட்ட…
மேலும்

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்ட வரட்சியின் பின் கடும்மழை

Posted by - January 24, 2017
மட்டக்களப்பு  பிரதேசம் நீண்ட வரட்சியின் பின் நேற்றுதிங்கள்கிழமை தொடக்கம்  இன்று  வரை இரண்டு நாட்களும்  இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து பெய்துகொண்டு வரும் அடை மழை காரணமாக  இப்பிரதேச மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் தொழிலுக்கு செல்லுகின்றவர்கள்…
மேலும்

பிள்ளையானின் பிணை மனு மே மாதம் விசாரணைக்கு

Posted by - January 24, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் பிணைமனுவை மே மாதம் 30ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.…
மேலும்

மன்னாரில் ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

Posted by - January 24, 2017
மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை, சிறுவர் விளையாட்டு பூங்கா என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின்…
மேலும்

சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

Posted by - January 24, 2017
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தை சேர்ந்த சின்னையா மார்கண்டு (வயது 84) என, பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை காணாமல் போயிருந்த…
மேலும்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் விடுதலை

Posted by - January 24, 2017
கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உட்பட 10 மாணவர்களும் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாக…
மேலும்

ஹட்டனில் வாகன விபத்து பெண் ஒருவர் பலி

Posted by - January 24, 2017
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்றில் குறித்த பெண் மோதுண்டதாக…
மேலும்

எதிர்க்கட்சி வரிசையில் பிரியங்கர ஜயரட்ன

Posted by - January 24, 2017
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்த பிரியங்கர ஜயரட்ன அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். முன்னாள் அமைச்சரும் கூட்டு…
மேலும்

ராஜபக்ஷவை சந்தித்த, முதலமைச்சர்களுடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார்

Posted by - January 24, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தொலைபேசியினூடாக கலந்துரையாடியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,தொலைபேசியினூடாகவே முதலமைச்சர்களுடன் கலந்துரையாடினார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ மற்றும்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

Posted by - January 24, 2017
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் (Consular Office) ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 26ம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ் மாவட்ட பொதுமக்கள் தூதரக…
மேலும்