காணாமல் போனவர்களை மீட்டுத்தரக்கோரி காணாமல் போனவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப்போராட்டம், 21வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவன் அறக்கட்டளை இயக்குனர் கணேஸ் வேலாயுதம் ஆகியோர் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று, காணாமல் போனோரின் உறவினர்களுடன் இன்று கலந்துரையாடினர்.

