கட்டிடமொன்று உடைந்து விழுந்ததில் 18 வயது இளைஞர் பலி!

251 0

கொள்ளுபிடிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலுமொருவர் காயமடைந்த நிலையில் , கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

நுவரெலியா – மிபிலிமான பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.