நிலையவள்

கிளிவெட்டி மஹா வித்தியாலய மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - May 29, 2017
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெருவெளி கிராமத்து ஆரம்ப பாடசாலை மாணவிகள் மூவர், இரு இளைஞர்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து அவ்விரு இளைஞர்களும், அக்கிராம மக்களினால் தாக்குதல்களுக்கு உள்ளாகி சிறைபிடிக்கப்பட்டு, பின்பு மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…
மேலும்

140 குடும்பங்களுக்கு சிறுதொழிலை ஊக்கிவிக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில்  சிறு தொழில் ஈடுபட்டுள்ள 140 குடும்பங்களுக்கு அவர்கள் மேற்கொண்டுள்ள சிறுதொழிலை ஊக்கிவுக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலுக்கும், ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் சேவையில் கலந்து கொண்ட அமைச்சர்…
மேலும்

போரல் பாதிக்கப்பட்டு பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு மடிக்கணனி வழங்கிவைப்பு

Posted by - May 29, 2017
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த போரில் தாயை இழந்த, பொருளாதார நலிவான குடும்பத்தின் மத்தியில் பல்கலைகழகம் தெரிவான மாணவிக்கு ரூபா 55000/= பெறுமதியான மணிக்கணனி வழங்கிவைக்கப்பட்டது.
மேலும்

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்

Posted by - May 29, 2017
வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயில் இம்முறை ஹேவிளம்பி  ஆண்டுக்கான விடை பொங்கல்  (வைகாசி பொங்கல்) மற்றும் காவடி விழா  விடை வைகாசி29ஆம் நாள் (12.06.2017) வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது இதனுடைய ஆரம்ப உட்சவமான  பாக்குத்தெண்டுதல் இன்றுகாலை ஆரம்பமானது…
மேலும்

கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

Posted by - May 29, 2017
கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, பொலித்தீன் பாவனையற்ற சுற்றாடலை உருவாக்குவோம் என்ற வாசகங்களை தாங்கி மாணவர்கள் கவனயீர்ப்பில்…
மேலும்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 29, 2017
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது . சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி மகாதேவா ஞாபகார்த்த நினைவு மண்டபம் ஒன்று 25 அடி அகலத்திலும் 60 அடி நீளத்திலும் அமைக்கப்பட உள்ளது.சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின்…
மேலும்

90 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 29, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தில் தம்மை மீள குடியேற்றுமாறு கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்றுடன் 90    ஆவது நாளை எட்டியுள்ளது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டநிலையில் தாம் இன்று இருப்பதாகவும் தம்மை விரைவில் குடியேற்றுமாரும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் சுமார் மூன்று…
மேலும்

83 நாளாக தொடரும் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம்

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 83   ஆவது நாளாக தொடர்கின்றது தொடர்ச்சியாக போராடிவரும் உறவுகள் தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளனர் இந்நிலையில் இந்த காணாமல் போனோர்…
மேலும்

நிவாரண பொருட்களுடன் இலங்கை வரவுள்ள 3வது இந்திய கப்பல்

Posted by - May 29, 2017
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நடவடிக்கைகளுக்காக நிவாரண பொருட்களுடன் 3வது இந்திய கடற்படை ஜலஷ்வா(Jalashva) கப்பல் இன்று இலங்கை வரவுள்ளது. முன்னதாக நிவாரண பொருட்களுடன் 2வது இந்திய கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கப்பலில் கொண்டுவரப்பட்ட அனர்த்த…
மேலும்

சுகாதார அமைப்புகள் பொதுமக்களிடம் கோரிக்கை

Posted by - May 29, 2017
இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்புக்கு உள்ளான மக்களின் சுகாதார தரத்தை சோதனை செய்ய, விசேட மருத்துவ குழுக்கள் பல, குறித்த பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
மேலும்