140 குடும்பங்களுக்கு சிறுதொழிலை ஊக்கிவிக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைப்பு

409 0
முல்லைத்தீவு மாவட்டத்தில்  சிறு தொழில் ஈடுபட்டுள்ள 140 குடும்பங்களுக்கு அவர்கள் மேற்கொண்டுள்ள சிறுதொழிலை ஊக்கிவுக்கும் வகையில் உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலுக்கும், ஊக்கமூட்டலுக்குமான விழிப்புணர்வுச் சேவையில் கலந்து கொண்ட அமைச்சர் றிசாட் பதியுதீன்  இதனை வழங்கி வைத்தார்.
நெடாவின் ஊடாக 50 லச்சம் ரூபா இதற்கென ஒதுக்கப்பட்டிருந்தது. முதல் கட்டமாக 25 பயணாளிகள் அமைச்சரிடம் இருந்து உதவிப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். ஏனைய பயணாளிகளுக்கு பிரதேச செயலகங்களில் வைத்து உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்படும்.