சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

389 0
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது .
சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி மகாதேவா ஞாபகார்த்த நினைவு மண்டபம் ஒன்று 25 அடி அகலத்திலும் 60 அடி நீளத்திலும் அமைக்கப்பட உள்ளது.சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் பொருளாளர் லயன் செ. மகாதேவாவினதும் அவரது புதல்வர் லயன் ம.பிரிதுவிராஜா வினதும் நிதிப் பங்களிப்பில் இந்த மண்டபம் அமைக்கப்பட உள்ளது.
லயன் பூமாதேவி மகாதேவா அம்மையார் கந்தரோடைக் கிரா மத்தில் வாழ்ந்து, சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் தலைவராக இருந்து ஸ்கந்தவரோதயக் கல் லூரி, ஸ்கந்தா ஆரம்பப் பாடசாலை, தெல்லிப்பழை மகா ஜனக் கல்லூரி என்று பல்வேறு பாடசாலைகளுக்கு பௌதீக வள உதவி, மாணவர்களின் கல்வி அபிவிருத்தி என்று பல் வேறு உதவிகளை வழங்கியவர்.
அம்மையார் அவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முன்னரே இயற்கையெய்தினார். அவரது ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தால் இந்த மண்டபம் அமைக்கப்பட உள்ளது. சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் லயன் மு. செல்வஸ்தான் தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் மண்டபத்துக்கான அடிக்கல்நடும் நிகழ்வு நடை பெற்றது.
முதலாவது அடிக்கல்லை கல்லூரியின் பழையமாணவ னும் யாழ்.மாவட்ட
 நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் நட்டுவைத்தார். தொடர்ந்து ஸ்கந்தா பழைய மாணவர் தாய்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளர்களான லயன் சி.ஹரிகரன், லயன் த. தேவராஜன், லயன் சி.கஜன் மற்றும் சுன்னாகம் லயன்ஸ் கழகத் தலைவர் லயன் ந.தயா ரூபன் மற்றும் சோதிமார்க் கண்டு ஆகியோர் நாட்டனர்.
வாழ்த்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்.த.சித்தார்த் தனும் சுன்னாகம் லயன்ஸ் கழகச் செயலாளர் லயன் சி.ஹரிகர னும் வழங்கினர். இந்த மண்டபத்தில் லயன் பூமாதேவி மகாதேவா அம்மையார் மறைந்து ஓராண்டு நினைவு நிறைவில் திறக்கப்படும் என்றும் இந்த மண்டபத்துக்குரிய இருக் கைகள் மற்றும் தளபாடங்களையும் தாமே வழங்குவர் எனவும் லயன் செ.மகாதேவா தெரிவித்தார்.