83 நாளாக தொடரும் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம்

347 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 83   ஆவது நாளாக தொடர்கின்றது

தொடர்ச்சியாக போராடிவரும் உறவுகள் தமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் நிறுத்தப்படாது என தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் இந்த காணாமல் போனோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமது உறவுகளின் தகவல்களை பெற விண்ணப்பித்த நிலையில் அவை நிராகரிக்கப்படமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.