வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்

370 0

வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு வற்றாப்பளை கண்ணகை அம்மன் திருக்கோயில் இம்முறை ஹேவிளம்பி  ஆண்டுக்கான விடை பொங்கல்  (வைகாசி பொங்கல்) மற்றும் காவடி விழா  விடை வைகாசி29ஆம் நாள் (12.06.2017) வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது இதனுடைய ஆரம்ப உட்சவமான  பாக்குத்தெண்டுதல் இன்றுகாலை ஆரம்பமானது

இன்றிலிருந்து எதிர்வரும் 15 நாட்கள்  மூன்று வேலை பூசைகள் நடைபெற்று இறுதிநாளான 12.06.2017மாபெரும் பொங்கல் உத்சவம் நடைபெறவுள்ளது

இதனடிப்படியில் 05.06.2017மாலை முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தமேடுத்து வந்து முள்ளியவளை காட்டாவினாயகர் ஆலயத்திலே உப்புநீரிலே விளக்கேற்றி மடிபரவி சிலம்புகாவியம் படிக்கப்பெற்றும்   07.06.2017. புதன் மடை  (காட்டாவிநாயகர் ஆலயம்) 09.06.2017  வெள்ளி மடை  ( காட்டாவிநாயகர் ஆலயம்)11.06.2017  ஞாயிறு. காட்டாவிநாயகர் ஆலய பொங்கல் உற்சவம். நடைபெற்று இறுதி நாளான 12.06.2017திங்கள். அதிகாலை காட்டாவிநாயகர்  ஆலயத்திலிருந்து மணப்பண்டம் எடுத்துவரப்பட்டு  வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உற்சவம் நடைபெறும்.

05.06.2017.  நள்ளிரவு முதல் 12.06.2017  அதிகாலை வரை உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத்தை காட்டா விநாயகர் ஆலயத்திலும் 12.06.2017 நாள்முழுதும் அம்மன்  ஆலயத்திலும் கண்டு அருள்பெற முடியும்.

இதேவேளை ஆலய கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையும்  இங்கு குறிப்பிடத்தக்கது.