கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

339 0

கிளிநொச்சியில் பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, பொலித்தீன் பாவனையற்ற சுற்றாடலை உருவாக்குவோம் என்ற வாசகங்களை தாங்கி மாணவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டதுடன், சத்தியபிரமாணமும் செய்தனர்.

குறித்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் இருவரும் உரையாற்றியிருந்தனர்.

மேலும், கல்வி அமைச்சர் உரையாற்றுகையில், இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தமை குறிப்பிடத்தக்கது.