நிலையவள்

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான விசாரணைக்கு தனிப்பிரிவு-பூஜித் ஜயசுந்தர

Posted by - August 7, 2017
திட்டமிடப்பட்ட கூட்டு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக தனியான பிரிவொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கண்டியில், மல்வத்த பிரிவின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல  தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றுகையிலே…
மேலும்

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் – திகாம்பரம்

Posted by - August 7, 2017
2020 ஆண்டாகும் போது பெருந்தோட்ட பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதே தமது நோக்கம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். நுவரெலிய லவர்சிலிப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள 25 தனித்தனி வீடுகளுக்கான…
மேலும்

யாழில் அதிரடி; பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் சற்று முன் ஆறுபேர் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் வாள்வெட்டுக் கும்பலின் முக்கியஸ்தர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணக் குடா நாட்டில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கைது நடவடிக்கையில்…
மேலும்

சீன மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - August 7, 2017
சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஆர்க் பீஸ் எனும் பெயரிலான இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய ரீதியில் வரவேற்றுள்ளனர். மருத்துவ உதவி வழங்குவதற்குத் தேவையான சகல வசதிகளும் நவீன ஏற்பாட்டுடன் இக்கப்பலில் காணப்படுகின்றன. அத்துடன்,…
மேலும்

கடவுளிடம் முறையிட்டோம், கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளார்- மஹிந்த

Posted by - August 7, 2017
ராஜபக்ஷ குடும்பத்தை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் எம்மை அவமானப்படுத்திய போது நாம் யாரிடமும் சொல்ல வில்லை. கடவுளிடமே அதனை முறையிட்டோம். தற்பொழுது கடவுள் அதற்குப் பரிகாரம் கொடுக்க ஆரம்பித்துள்ளார். அவர்கள்…
மேலும்

இவ்வருடத்தில் மாத்திரம் டெங்கு நோய் மரணம் 350, மீண்டும் எச்சரிக்கை

Posted by - August 7, 2017
இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அடிக்கடி…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை –ரணில்

Posted by - August 7, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை, அவ்வாறு இருப்போர் விலக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். கடந்த அட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார். அட்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

யாழ். திருநெல்வேலியில் சில உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் சீல் வைப்பு!

Posted by - August 7, 2017
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடனடியாக இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , யாழ். திருநெல்வேலிப் பகுதியில்…
மேலும்

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் 18 பேர் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு 9-30 மணியளவில் விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 18 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர். அத்துடன்…
மேலும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸார் மீது கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு…
மேலும்