நிலையவள்

வட மாகாண முதலமைச்சர் – பொலிஸார் இடையே சந்திப்பு

Posted by - August 15, 2017
வட மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வட மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் வட மாகாணத்தின் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில காலங்களாக வட மாகாணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்…
மேலும்

‘யோவுன் பியச’ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Posted by - August 15, 2017
‘சமாதானத்திற்காக இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச இளைஞர் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு ‘யோவுன் பியச’ (www.yowunpiyasa.lk) என்ற பெயரில் இளைஞர் நட்பு இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று…
மேலும்

டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரி

Posted by - August 15, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார். செப்டம்பர் 12 முதல் 25 வரை நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தடரில்,…
மேலும்

யுத்தம் நிறைவுற்று பல ஆண்டுகள் கடந்தாலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை – மக்கள் விசனம்

Posted by - August 15, 2017
யுத்தம் நிறைவுற்று பல ஆண்டுகள் கடந்தாலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லைஎன மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் காணப்படுகின்ற போதிலும், குறித்த குளங்களை அபிவிருத்தி செய்து விவசாயம், நன்னீர் மீன்பிடிகளை ஊக்குவிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும் என்பதே எமது முன்னோர்களின்…
மேலும்

நபரொருவர் கொடூரமாக கொலை!

Posted by - August 15, 2017
குருநாகல் – வெல்லவாய – உயன்கொல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் மற்றும் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிலருக்கு இடையே ஏற்பட்ட முறுகலை சமரசப்படுத்த சென்ற போதே அவர் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதில் படுகாயமடைந்த 53 வயதான உயன்கொல்ல…
மேலும்

யாழில் தாக்கி இளைஞர் பலி!

Posted by - August 15, 2017
ஆறு மாதங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் இன்று அதிகாலை மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காவற்துறை இதனைத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மழை பெய்த போது குறித்த…
மேலும்

38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்

Posted by - August 15, 2017
கிளிநொச்சிமாவட்டத்தில் 38 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது, இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை இன்று இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர். கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,…
மேலும்

உயர்நீதிமன்றம் செல்லும் பெப்ரல் அமைப்பு!

Posted by - August 15, 2017
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்…
மேலும்

18 சாரதிகளுக்கு அபராதம்

Posted by - August 15, 2017
வெவ்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 சாரதிகளுக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சத்து இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கம்பஹா மேலதிக நீதவான் லலித் கன்னங்கர முன்னிலையில் நேற்று இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் , குடிபோதையில் வாகனம் செலுத்திய…
மேலும்

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

Posted by - August 15, 2017
இறக்குமதி செய்யப்படும் சீனி 1 கிலோகிராமுக்கான வரி 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இறக்குமதிக்கான விசேட பண்ட வரியே இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த வரி அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.இதனை நிதியமைச்சு இன்று அறிவித்தது.
மேலும்