‘சமாதானத்திற்காக இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் சர்வதேச இளைஞர் தினம் இம்முறை கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு ‘யோவுன் பியச’ (www.yowunpiyasa.lk) என்ற பெயரில் இளைஞர் நட்பு இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று சுகாதார கல்வி அலுவலகத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தலைமையில் நடைபெற்றது.

