நிலையவள்

பஸ் விபத்தில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில்

Posted by - October 25, 2017
தம்புள்ளை நகரில் ஏற்பட்ட பஸ் விபத்தொன்றில் இரு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுராதபுரத்திலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்று போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த…
மேலும்

திவுலபிட்டிய துப்பாக்கி சூடு – மற்றுமொருவர் விளக்கமறியலில்

Posted by - October 25, 2017
திவுலபிட்டிய, ஹேன்பிட்டிகெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த சம்பவத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி…
மேலும்

சிறைச்சாலையில் முஸ்லிம் கைதி கொலை – அடையாளம் காண உறவினர்களின் உதவியை நாடும் பொலிஸார்

Posted by - October 25, 2017
வெலிக்கடை சிறைச்சாலையின் மனநோயாளர் பிரிவு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், மற்றுமொரு மனநோயால் பாதிக்கப்பட்ட சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சந்தேக நபர் முஹம்மட் அபூபக்கர்…
மேலும்

பாடசாலை மாணவி கர்ப்பமான சம்பவம் – அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 25, 2017
அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில், மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அவரை பாடசாலையில் இருந்து நீக்குவதற்கு தீர்மானம் எடுத்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்ப்பாக சம்பந்தப்பட்ட…
மேலும்

அரசியலமைப்பு செயன்முறையை முற்றாக எதிர்ப்பதாக ரத்ன தேரர் தெரிவிப்பு

Posted by - October 25, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையால் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படுவதாகவும் அதனை தான் முற்றாக எதிர்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற இலங்கை தேசிய மஹா…
மேலும்

நல்லிணக்க செயலகத்தின் கால எல்லை நீடிப்பு

Posted by - October 25, 2017
நல்லிணக்க செயலகத்தின் கால எல்லையினை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் சாதாரண பொது மக்களை அறிவுறுத்தி திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை கவனத்திற் கொண்டு, அச்செயலகத்தின் கால எல்லையினை 2019-03- 31ம் திகதி வரை நீடிப்பது தொடர்பில்…
மேலும்

இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர்

Posted by - October 23, 2017
யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது.  அதனை  நீதிமன்றமே  தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை  இவ்வாறு  பாதுகாப்பதாக  கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை  மீறுவதைப் போன்றதாகும் என்று  இலங்கை்கான விஜயத்தை முன்னெடுத்த உண்மை, நீதி, நட்டஈடு,மற்றும் மீள்…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்குவரும் சாத்தியம் -சிவாஜிலிங்கம்

Posted by - October 23, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நாளை மறுதினம் நிறைவுக்கு வரும் சாத்தியம் உள்ளதாக கூறியுள்ள மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் போதைவஸ்த்து கடத்தல் மற்றும் பாரிய குற்றங்களை செய்த கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் இனிமேல் தடுத்துவைக்கப்படமாட்டார்கள் அதற்கான உடனடி…
மேலும்

யாழ் துப்பாக்கி சூட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள காவல்துறை குழுக்கள் நியமனம்

Posted by - October 23, 2017
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இனந்தெரியா நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர…
மேலும்

வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் – வட மாகாண ஆளுநர்

Posted by - October 23, 2017
இந்த நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம் ஆனால் வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார். பயாகல இந்து வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்தினம்…
மேலும்