புதிய அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையால் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படுவதாகவும் அதனை தான் முற்றாக எதிர்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய நூலகம் மற்றும் ஆவணங்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற இலங்கை தேசிய மஹா சபையின் ஊடகவியலார் சந்திப்பின் போதே ரத்ன தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்புக்களில் தான் அதற்கு எதிராக வாக்களிப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையால் நாடு முற்றிலும் குழப்பமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

