ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் தேர்வில் எந்த விதமான குளறுபடிகளும் நடைபெறவில்லை என கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வௌ்ளவத்தை பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
வத்தளை, எலகந்த பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் என அழைக்கப்படும் கிரிஸ்டல் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 2 பெண்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி அமைச்சின் அனுமதியின்றி, பாடசாலை மாணவர்களிடமிருந்து, அப்பாடசாலை நிர்வாகத்தினரால் பணம் அறிவிடப்பட்டால், அது தொடர்பில், 1988 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தித் தெரிவிக்குமாறு, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2017 ஆம் ஆண்டிற்கான தேருநர் இடாப்புத் திருத்தம் செய்யப்பட்டு வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் 18 வயதை பூர்த்தி செய்த தமிழ், முஸ்லிம் மக்கள் தம்மை புதிய வாக்காளராக பதிவு செய்து கொள்ள முன்வர வேண்டும் என சப்ரகமுவ மாகாணசபை ஐ.தே.க உறுப்பினர் வை.எம்.இப்ளார்…
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள களைநாசனி வகைகளை கொட்டகலை பிரதேசத்திற்கு கொண்டு வர முற்பட்டபோது 119 பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாக கொண்ட