நீதிமன்ற மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது வெறும் செய்தி மாத்திரமே என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு, குரண பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் பரஸ்பரம் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததாக கூறப்படும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களில் மழை பெய்த போதும் போதுமான மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என மின்சக்தி மற்றும் மாற்று சக்திவலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக மின்சார உற்பத்திற்கு போதுமான நீர் மட்டம் நீர்த்தேங்கங்களில் இல்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன…
நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை…