முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல்

201 0

முல்லைத்தீவில் இராணுவ பேருந்து மீது நேற்றிரவு கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. முல்லைத்தீவு, தண்ணீரூற்று பழைய காவல் துறை நிலையத்துக்கு அருகே நேற்றிரவு 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

“தண்ணீருற்று பகுதியிலிருந்து முல்லைத்தீவு பகுதி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இராணுவத்தின் பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பேருந்தின் முன் பக்கக் கண்ணாடி முற்றாக உடைந்து சேதமடைந்தது.

சம்பவம் தொடர்பில் காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. இராணுவத்தினரும் காவல்துறை புலனாய்வாளர்களும் இணைந்து அருகே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த சி.சி.ரி. கமராவின் பதிவுகளைச் சோதனையிட்டனர்.

வீதிச் சோதனை நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை இறக்கி வந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது” என்று காவல் துறை தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியது. கேப்பாபிலவு – வற்றாப்பளை முள்ளியவளை வீதி மற்றும் முள்ளியவளை – தண்ணீரூற்று முதன்மை வீதி ஆகிய இடங்களில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.