முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

237 0

வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது.

அந்தவகையில் முல்லைத்தீவிலும் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு பூரண கரத்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளும் தமது பணிகளை நிறுத்தி பூரண ஆதரவு வழங்கினர்.

இந்நிலையில் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்க்கனவே அறிவித்ததற்கு அமைவாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நிகழ்த்தினர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காலை பத்து மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 51 ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகிறோம்  இதனைவிட தமது காணிகளை கோரி கேப்பாபுலவு மக்கள் இன்று ஜம்பத்தெட்டாவது நாளாக தமது போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக எமக்கு ஒரு உரிய தீர்வை பெற்றுத்தர முன்வருமாறு கோரிக்கை விடுத்தனர்.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாரும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் தமது போராட்டத்தை தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி பிரதமர் எதிக்கட்சிதலைவர் முதலமைச்சர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு மகயர்களை கையளித்தனர்.

அந்தவகையில் ஜனாதிபதி பிரதமர் மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கான மகயர் களை மாவட்ட செயலகத்துக்குள் சென்று மாவட்ட செயலக அதிகாரியிடம் கையளித்ததோடு வடமாகான முதலமைச்சருக்கான  மகயரை வடமாகான சபை உறுப்பினர் ரவிகரனிடமும்  எதிக்கட்சிதலைவருக்கான மகயரை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா விடமும் கையளித்தனர்.

இந்த போராட்டத்துக்கு காணாமல் போனவர்களின் உறவுகள் மட்டுமின்றி முல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த பலநூர்ர்க்கனக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சி சிவமோகன் வடமாகானசபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் வடமாகானசபை உறுப்பினர்  து.ரவிகரன் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆதரவை வழங்கினர்.