டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின் உழைப்பு மகத்தானது

297 0
டெங்கை கட்டுப்படுத்துவதில் பிரதேச சபை ஊழியர்களின்  உழைப்பு மகத்தானது சுகாதார சேவைகள பிரதிப் பணிப்பாளர் கார்த்திகேயன்.
கிளிநொச்சியில் டெங்கு நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பிரதேச சபைகளின் சிற்றூழியர்களின்  உழைப்பு மகத்தானது நேரம் காலம் பார்க்காது பணியாற்றியதன் பயனாக கிளிநொச்சில் டெங்கு நோயை பெருமளவில் பரவவிடாது கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இன்று 22-03-2017 பிற்பகல் கரைச்சி பிரதேச சபையில் சிற்றூழியர்களின் பணியை பாரட்டி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சியில் குறிப்பாக கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் அரப்பணிப்பு மிக்க உழைப்பை வழங்கி வருகின்றார்கள் நேரம் காலம் பார்க்காது  அவர்கள் மேற்கொண்ட உழைப்பின் காரணமாகதான் நாட்டின் ஏனைய பிரதேசங்கள் போன்று அல்லாது கிளிநொச்சியில் டெங்கு தீவிரமாக பரவாது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிகிறது.எனவே உங்களது அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு தொடரவேண்டும், மருத்துவ துறையும், மாவட்ட மக்களும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக உள்ளனர். டெங்கு நோயை கட்டுப்படுத்துவது என்பது ஒரு கூட்டு உழைப்பு அதில் பிரதேச சபையின் சிற்றூழியர்களின் பங்களிப்பு முதன்மையானது. எனத் தெரிவித்த மருத்துவர் கார்த்திகேயன்.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மக்களும் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள் எனவே இவ்வாறன ஒத்துழைப்பும் விழிப்புணர்வும் மேலும் தொடரும் போதே மாவட்டத்தில் டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்
இந்தச் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின்  செயலாளர் க.கம்சநாதன், சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையின் சிற்றூழியர்கள் ஆகியோர் காணப்பட்டனர்.