வடமாகாண அமைச்சர்களுக்கெதிரான விசாரணை குழுவினர் கள விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

190 0
வட மாகாண அமைச்சர்களிற்கு எதிரான முறைப்பாட்டினை விசாரணை செய்த குழுவினர் தமது விசாரணைகளை நிறைவு செய்த்தனையடுத்து பல இடங்களிற்கும் நேரில் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண அமைச்சர்களிற்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை விசாரணை செய்வதற்காக வட மாகாண முதலமைச்சரினால் இரு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் ஓர் ஓய்வு பெற்ற மாவட்ட அரச அதிபர் அடங்கிய குழுவினை நியமித்திருந்தார். இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவின் முன்பாக பலரும் பல குற்றச் சாட்டுக்களை முன் வைத்தனர்.
அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அமைச்சு ரீதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது. இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் அதில் சுட்டிக்காட்டப்பட்ட பல இடங்களையும் நேரில் சென்று ஆய்விற்கு உட்படுத்தும் வகையில் கடந்த சனி , ஞாயிறு இரு தினங்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பிரகாரம் குடாநாட்டின் நில பகுதிகளோடு கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா ஆகிய பகுதிகளிற்கும் நேரில் சென்ற புற்றஞ்சாட்டப்பட்ட விடயங்களிற்குரிய இடங்களை நேரில் ஆய்வு செய்து திரும்பியுள்ளனர்.