யாழ்ப்பாணம் தச்சன் தோப்பு பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்படட ஆட்டோ ஒன்று கொழும்பிலிருந்து வந்த கடுகதி ரயிலுடன் மோதியதில் சாரதி தூக்கிவீசப்பட்டு படுகாயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பினார் .இந்த சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது .ஆட்டோ வில் யாரும் பயணிக்காத காரணத்தினால் வேறு சேதங்கள் இடம்பெறவில்லை .ஆட்டோ பாவனைக்கு உதவாத வகையில் நொறுக்கப்பட்டுள்ளது .

