வடமாகாண இ.போ ச சபை பழமிகாமையாளர்களிற்கான தெரிவு தொடர்பாக கலந்துரையாடலில் இணக்கம்

298 0
வட மாகாணத்தின் இ.போ.சபையின் சாலைகளிற்கான  முகாமையாளர்களின்  நியமனம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இ. போ.சபையின் தலைவரிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
இ.போ.சபையின் தலமைப் பணிமனையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சேனாதிராசா , இ.சாளஸ் நிர்மலநாதன் , சி.சிறிதரன் ஆகியோரும் போக்குவரத்து சபையின் சார்பில் அதன் தலைவர் ரமல் சிறிவர்த்தனா மற்றும் வட மாகாண பிராந்திய முகாமையாளர் உபாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
மன்னார் மாவட்ட சாலை முகாமையாளர் நியமனம் உள்ளடங்களாக 5 முகாமைநாளர்களிற்கான நியமனம் வட மாகாண சாலைகளிற்கு போதிய பேரூந்துகள் இன்மை , பாடசாலை சேவைகளில்ல உள்ள குறைபாடுகள் , கிளிநொச்சி மாவட்ட இ.போ.சபை அமைவிடம் தொடர்பில் பேசப்பட்டது.
குறித்த விடயங்களில் முகாமையாளர் நியமனம் தொடர்பில் மன்னாருக்கு கான்டீபனும் , வவுனியாவிற்கு சாகீர் , கிளிநொச்சி லம்பேட் , கோண்டாவில் மூசீன் ஆகியோருடன் காரைநகருக்கு சிறிமோகனும் நியமனம் செய்யப்படவுள்ளனர். அதேபோன்று அதிக பேரூந்துகள் பழுநடைந்தமையால் ஏற்படும் பற்றாக்குறைக்கு இந்த ஆண்டு புதிதாக கொள்வனவு செய்யப்படும் பேரூந்துகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோன்று பாடசாலை மாணவர்களிற்கான சேவையை சீராக்கல் செய்வதற்கும் இந்த ஆண்டின் புதிய பேரூந்துகள் கிடைக்கும்போது அவற்றின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்றனர். இதே போன்று கிளிநொச்சி நகரின் அபிவிருத்திக்காக கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சாலையை விட்டுக்கொடுப்பது தொடர்பில் உரையாடியவேளையில் நகரின் அருகில் பொருத்தமான இடம் வழங்கப்பட்டால் அது தொடர்பில் ஆராயப்படும் எனப் பதிலளித்துள்ளனர். என்றார்.