கிளிநொச்சியில் 2935 ஏக்கர் நிலம் பயிரிடக்கூடிய நீர் உள்ளதாம்

227 0
கிளிநொச்சி மாவட்டத்தில் 2017ம் ஆண்டிற்கான சிறுபோக நெற்செய்கையாக 2935 ஏக்கர்  நிலம் மட்டுமே பயிரிடப்படக் கூடியதான நீர் உள்ளதாக நேற்றைய மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் மேலும் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் தற்போதுள்ள நீர் அளவுகளின் பிரகாரம் இந்த ஆண்டின் சிறுபோகத்தில் 2935 ஏக்கர் மட்டுமே மேற்கொள்ள முடியும் . அவ்வாறு சிறு போகம் மேற்கொள்ளக் கூடியதான குளங்கள் இனங்கானப்பட்டுள்ளன. அவற்றின் அவற்றின் அடிப்படையில் 5 குளங்களே தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இரணைமடுக் குறத்தின் அளவு தற்போது 10 அடியை மட்டுமே கொண்டுள்ளதனால் இக் குளத்தின் கீழான நெற் செய்கை தொடர்பினில் சித்திரை மாதம் 4 ம் திகதிக்குப் பிற்பாடே தீர்மானிக்கப்பட முடியும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஏதாவது மழை வீழ்ச்சி ஏற்பட்டால் குளத்திற்கான நீர் வழத்து ஏற்பட்டால் மட்டுமே அதன் அடிப்படையில் அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
இதேவேளை இந்த ஆண்டின் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்ட 5 குளங்களும் வன்னேரி , அக்கராயன் , புதுமுறிப்பு , கல்மடு , குடமுறுட்டி ஆகிய குளங்கள் எனவும் இவற்றின் குளத்தில் உள்ள நீரின் அளவைக் கொண்டு செய்கை பண்ணக்கூடியதான வயல் நிலங்களின் அளவே மேற்படி தொகையான 2 ஆயிரத்து 935 ஏக்கர் எனவும் தெரிவிக்கப்பட்டது.-