கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்

270 0

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து நான்காவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.

எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சரிவை சந்தித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர் பட்டியலை போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் 86 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.

அடுத்ததாக வாரன் பப்பெட் 75.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சொத்துக்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.

முதல் பத்து இடங்களில் சமூகவலைதள தலைவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அமேசான் இணைய வர்த்தக நிறுவனத் தலைவர் ஜெப் பிஸோஸ் 3 ஆம் இடத்தையும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் 5 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டைவிட 220 இடங்கள் பின்தங்கி இம்முறை 544 ஆவது இடத்தில் உள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவில் 565 கோடீஸ்வரர்களும், சீனாவில் 319 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டிலிருந்து 13 சதவீதம் அதிகரித்திருப்பதாக போர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.