யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

328 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.

“புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்” அமைப்பின் சார்பாக புங்குடுதீவிலுள்ள அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்குமிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று முன்தினம் காலை ஆரம்பமாகி நடைபெற்று, நேற்று இறுதி போட்டி நடைபெற்றதுடன், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, “தாயகம்” அமைப்பின் நிறுவுனர்களான, அமரர்சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை ;, அமரர் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டது.

“சமூக சேவகரும், முன்னாள் அதிபர் மற்றும் தாயகம் சமூக சேவையகத்தின் போசகருமான” எஸ்கே.சண்முகலிங்கம், இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கி, ஆரம்பித்து வைக்க முதலில் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தேசியக் கொடியினை வடமாகாண சபை ஆளுநரின் செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் ஏற்றியதுடன், “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் கொடியினை “சமூக சேவகரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான” தனபாலன் சுலோசனாம்பிகை ஏற்றி வைத்தார்.

அரையிறுதி போட்டி, இறுதிபோட்டி, பரிசளிப்பு விழா போன்றவற்றுக்கு முன்பாக, இரண்டு விளையாட்டுக் கழகங்களான, “தாயகம்” விளையாட்டுக் கழகமும், “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகமும், “காட்சி உதைபந்தாட்டப் போட்டி”யில் ஈடுபட்டு நீண்ட நேர பிரயத்தனங்களில் மத்தியிலும், சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தண்ட உதை முறையில் “வயலூர் முருகன்” விளையாட்டுக் கழகம், “தாயகம்” விளையாட்டுக் கழகத்தை மூன்றுக்கு இரண்டு 3 இற்கு 2 கோல் கணக்கில் வெற்றியீட்டியது.போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.