மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி(காணொளி)

275 0

மனித உன்னதத்தை நோக்கிய மனித மேம்பாட்டு கல்வி முறை என்ற தொனிப்பொருளில் கண்காட்சி இடம்பெற்று வருகிறது.

சத்தியசாயி கல்வி நிறுவனத்தினால் மனித உன்னதத்தை நோக்கிய சத்தியசாயி மனித மேம்பாட்டுக்கல்வி முறை வடமராட்சி வதிரி மத்திய கல்லூரியில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

வடமராட்சி மத்திய மகளீர் கல்லுரியில் நடைபெற்றுவரும் கண்காட்சியை நேற்றையதினம் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சத்தியசாயி பாபாவின் இணைப்பாளர் கலாநிதி வி.ஜெகநாதன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சத்திய சாயி நிறுவனத்தின் மத்திய சபை தலைவர் விக்னராசா மனேகரன் மற்றும் வடமராட்சி மத்திய கல்லுரி அதிபர் எஸ்.பாலராணி ஸ்ரீதரன் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாள் நிகழ்வாகிய இன்றையதினம் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன் கலந்து கொண்டார், சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்விப்பணிப்பாளர் எஸ். புஸ்பலிங்கமும் சத்திய சாயி நிறுவனத்தின் தேசிய கல்வி அமைப்பாளர் என். புகேந்திரனும் கலந்து கொண்டனர்

மூன்றாம் நாளான நாளைய தினம் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜாவும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலர் கே.யோகநாதனும் கலந்துகொள்ளவுள்ளனர்.