கேப்பாப்புலவு மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் – சீ.வி விக்னேஸ்வரன்

262 0

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என வடமாகான முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மக்களால் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மேற்கொண்டுவரும் கவனயீர்பு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகள் வான்ப்படையினர் வசமுள்ளதுடன் குறித்த காணியில் வசித்த மக்களை மீள்குடியேற்றத்;தின் போது கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில்; தங்கவைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தமது காணிகளை விடுவித்துத் தங்களை சொந்தநிலங்களில் மீள்குடியேற்றமாறு வலியுறுத்தி கேப்பாப்புலவு பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்;தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் வடக்கு மாகான முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் நேரில் சென்று கலந்துரையாடினார்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என்றும், அதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் எடுப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது.