இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவுள்ளது(காணொளி)

265 0

1952ஆம் ஆண்டு இங்கினியாக்கல என்ற பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், வட்டக்கண்டல் படுகொலை மாத்திரமல்ல ஏனைய படுகொலைகளும் நடந்திருக்காது என, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே வடக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை அதிரடிப்படையினர் நடாத்திய திட்டமிட்ட இனப்படுகொலையாக, மன்னார் வட்டக்கண்டல் படுகொலை அமைந்துள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசாங்கம் தமிழ் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதாக இருந்தால், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.